மசாஜ் சென்டரில் விபசாரம் தம்பதி உள்ளிட்ட 5 பேர் கைது; 4 பெண்கள் மீட்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
03:43

புதுச்சேரி : அண்ணா நகரில் மசாஜ் சென்டர் பெயரில் விபசார தொழில் நடத்திய தம்பதி, வாடிக்கையாளராக வந்திருந்த கேரளா வாலிபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.புதுச்சேரி அண்ணா நகரில் இயங்கிய மசாஜ் சென்டரில், விபசார தொழில் நடத்திய இருவர், மற்றும் வாடிக்கையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.



இந்நிலையில், அண்ணா நகர் 6வது குறுக்கு தெருவில் இயங்கும் 'ஸ்பா'வில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து விபசாரம் நடப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம், 2வது மாடியில் இயங்கி வரும் ஸ்பாவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்



அங்கு, ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து விபசார தொழில் நடத்துவதை உறுதி செய்தனர்.விசாரணையில், திருப்பூர் மாவட்டம், சோலையூரை சேர்ந்த மகி, தனது மனைவியுடன் சேர்ந்து 'ஸ்பா' என்ற பெயரில் விபசார தொழில் நடத்தி வருவது தெரிய வந்தது. தம்பதி இருவரும், புதுசாரம், பாலாஜி நகரில் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர்.



மகி மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.'ஸ்பா'வில் இருந்த புதுச்சேரி, திருவக்கரை, செஞ்சியைச் சேர்ந்த 4 பெண்கள் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.வாடிக்கையாளர்களாக வந்திருந்த கேரளா மாநிலம் கேட்டயம், சஞ்குணாசேரியை சேர்ந்த ஜான்சன் ஜோசப்,28; இடுக்கி, வல்லத்தோவல் கிராமத்தை சேர்ந்த அஸ்பின் ஆண்டனி, 25; கோட்டயம் பகுதியை சேர்ந்த நட்டிஷா, 22; ஆகிய மூவரை கைது செய்தனர்.



புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இவர்கள் மூவரும், ஆன்லைன் மூலம் விபசாரம் நடக்கும் ஸ்பாவிற்கு சென்று போலீசில் சிக்கிக் கொண்டனர்.கைது செய்யப்பட்ட 5 பேரையும் புதுச்சேரி முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X