நிரம்பியது வளசரவாக்கம் ஏரி; ஆக்கிரமிப்பால் வெள்ள பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
03:56

வளசரவாக்கம், : வளசரவாக்கம் ஏரியின் எஞ்சியுள்ள நீர்பிடிப்பு பகுதி நிரம்பி, குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது



.வளசரவாக்கம் மண்டலம், 152வது வார்டு, எஸ்.வி.எஸ்., நகரில் வளசரவாக்கம் ஏரி இருந்தது. இந்த ஏரியில் மிஞ்சிய நீர் பிடிப்பு பகுதி, எஸ்.வி.எஸ்., நகர் பிரதான சாலையில் உள்ள தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் உள்ளது.தற்போதைய மழையில், அந்த நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த நீர் பிடிப்பு பகுதியின் ஒரு புறம் உள்ள எஸ்.வி.எஸ்., நகர் பிரதான சாலையிலும், மறு புறம் உள்ள அம்பேத்கர் சாலையிலும் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.



இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அம்பேத்கர் சாலையில் மின் மோட்டார் அமைத்து மழை நீர் வடிகாலில் தண்ணீரை இறைக்கும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையில், 2015ல் ஏற்பட்ட வெள்ளத்திலும், வளசரவாக்கம் ஏரியின் இப்பகுதி நிரம்பியதால், அதை சுற்றி உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.மாயமான வளசரவாக்கம் ஏரிக்கு, போரூர் ஏரியில் இருந்து நீர் வரத்து இருந்தது.




வளசரவாக்கம் ஏரி நிரம்பியதும், பெத்தானியா நகரில் உள்ள கால்வாய் வாயிலாக, ராமாபுரம் ஏரிக்கு உபரி நீர் செல்லும்.பின், ராமாபுரம் ஏரி நிரம்பியதும், திருவள்ளுவர் சாலை வழியாக, ராமாபுரம் எம்.ஜி.ஆர்., தோட்டம் பின் புறம் உள்ள கால்வாய் வழியாக அடையாற்றில் உபரிநீர் கலக்கும்.தற்போது வளசரவாக்கம் ஏரி, அதன் வரத்து மற்றும் போக்கு கால்வாய் ஆக்கிரமிப்பால் மாயமாகியுள்ளது. ஏரியின் மிஞ்சிய பகுதியையும், தனியார் நிறுவனம் சுற்றுசுவர் கட்டி ஆக்கிரமித்துள்ளது.



ஆக்கிரமிப்புகளை அகற்றி, மிஞ்சியுள்ள ஏரியை மீட்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.என்னென்ன ஆக்கிரமிப்புகள்?சென்னையில், 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, வளசரவாக்கம் மண்டலம் மிகவும் பாதிக்கப்பட்டது. மதுரவாயல் வட்டம், வளசரவாக்கம் கிராமத்தில் உள்ள நீர் நிலை மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்து அப்போது கணக்கெடுக்கப்பட்டது.



ஆனால், ஆறு ஆண்டுகள் ஆகியும், இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகள் சர்வே எண்: 215 /2 ஏரி உள்வாய் ஆக்கிரமிப்பு - 6 குடியிருப்புகள் சர்வே எண்: 197 கசம் எஸ்.வி.எஸ்., நகர் ஆக்கிரமிப்பு - 10 குடியிருப்புகள் சர்வே எண்: 200 - குளம் புறம்போக்கு - ஆக்கிரமிப்பு - வெங்கடசுப்பிரமணியன் கோவில் மற்றும் 10 குடியிருப்புகள் சர்வே எண்: 204, 205, 212 -- ஏரி உள்வாய் -- தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சர்வே எண்: 206 ஏரி -- அம்பேத்கர் சாலை - ஆக்கிரமிப்பு



- 130 குடியிருப்புகள் சர்வே எண்: 207/2 - - ஏரி உள்வாய் - ஆக்கிரமிப்பு - குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனம், ஒரு ஏக்கர் பரப்பளவில் சுற்றுவர் கட்டி ஆக்கிரமிப்பு சர்வே எண்: 169/2 - ருத்திரபூமி- ஆக்கிரமிப்பு - குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனம் சுற்றுவர் கட்டி ஆக்கிரமிப்பு



சர்வே எண்: 210 -- குளம் - ஆக்கிரமிப்பு - குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு சர்வே எண்: 211 -- ஏரி உள்வாய் -- வெங்கட சுப்ரமணிய நகர் மற்றும் விரிவு ஆக்கிரமிப்பு - குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு சர்வே எண்: 148/3 -- வண்டிப்பாட்டை -- சுரேஷ் நகர் பிரதான சாலை.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X