கால்வாய் இருக்கட்டும்; சாலையை தோண்டு! கொளப்பாக்கத்தில் அதிகாரிகள் அடித்த கூத்து!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
04:06

மாங்காடு : மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தில், மழைநீரை அகற்ற நீர்வழிப்பாதையை விட்டு, மாற்று வழியில் கால்வாய் தோண்டியதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.



குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சி, தொடர் மழையில், அதிக பாதிப்புக்குள்ளானது. மேக்ஸ்வொர்த் நகரில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்ட தெருக்களைச் சேர்ந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் மழைநீரை அகற்ற, பிரதான சாலை வழியாக அதிகாரிகள் கால்வாய் வெட்டினர்.



இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:மேக்ஸ்வொர்த் நகர் வழியாக நீர்வழிப்பாதை செல்கிறது. அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை அகலப்படுத்தி, மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, கொளப்பாக்கம்- - கவுல்பஜார் சாலையில், குடியிருப்புகளை ஒட்டி கால்வாய் வெட்டியுள்ளனர்.



இது மேடான பகுதி என்பதால், மழைநீர் வடிய வாய்ப்பே இல்லை.அதே நேரத்தில், இப்படி செய்வதால் பொதுமக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுமே தவிர குறையாது. அதிகாரிகள் ஏதோ கடமைக்காக இப்படி செய்கின்றனர். உண்மையாகவே மழை நீரை அகற்ற வேண்டும் என நினைத்திருந்தால், இப்படி எல்லாம் செய்ய முடியுமா?இவ்வாறு பொது மக்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-டிச-202106:49:38 IST Report Abuse
அப்புசாமி அவிங்களை ஒண்ணும் சொல்லாதீங்க. சமூக நீதி அதிகாரிங்க பாவம். இருக்குற மேட்டை பள்ளம் தோண்டி, கால்வாய்க்கும், ரோடுக்கும் இடையே வித்தியாசம் இல்லாம சமன் படுத்தறாங்க. இதுவல்லவோ சமூக நீதி? இதுவன்றோ புது விடியல். இந்தக் கருத்துடன் ஒத்துப்போறவங்க இங்கே வந்து ஒரு ஓ போடுங்க.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
01-டிச-202105:23:15 IST Report Abuse
Mani . V மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் இது போன்ற பொறுப்பற்றவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது நடுத்தெருவில் நிற்க வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X