தேவையில்லாத மின் இணைப்புகளை துண்டிக்க உத்தரவு! கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் 'செக்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
04:45

மதுரை: மதுரை மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் தேவையற்ற மின் இணைப்புகளை துண்டிக்கவும், அனைத்து மின் இணைப்புகளையும் ஆன்லைன் பேமண்ட் முறையில் கொண்டு வரவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



இம்மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 420 கிராம ஊராட்சிகளில் 1600 கிராமங்கள் உள்ளன. பொது பயன்பாட்டிலுள்ள அனைத்து மின் மீட்டர்களையும் மின்வாரியம், ஊரக வளர்ச்சித்துறை சர்வர்களுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு முன்னதாக பழுதான, பயனற்ற நிலையிலுள்ள மின் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.



பயனில்லாத, செயல்பாடற்ற மின் இணைப்புகளை துண்டிப்பதற்கான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் ஒப்படைக்க கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார். எத்தனை மின் இணைப்புகள் துண்டிக்கப்படவுள்ளன, எத்தனை விண்ணப்பங்கள் மின்வாரிய அலுவலகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை உடனடியாக தெரிவிக்க ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளார்.



அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆன்லைன் பேமென்ட் முறைக்கு வந்த பிறகு எந்த மின் இணைப்பானது பயன்பாடின்றி தொடர்ந்து குறைந்தபட்ச கட்டணத்தில் உள்ளது என்பதை அறிய எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறை உருவாக்கப்படும். மேலும் நிலுவையிலுள்ள மின் கட்டணம், குடிநீர் கட்டணத்தை விரைந்து செலுத்த வேண்டும். ஊராட்சியில் போதிய நிதியிருந்தும் மின் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X