மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை! ஓடை தூர்வாராததால் குடியிருப்பில் வெள்ளம்; ஒரு நாள் பெய்த மழைக்கே தாங்காத விருதுநகர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
05:09

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ஆறு, கண்மாய் நீர்வரத்து ஓடைகளை முறையாக துார்வாராததால் ஒரு நாள் கனமழைக்கே தெருக்கள், குடியிருப்பில் வெள்ளம் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர்.



வ மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விருதுநகரில் தினமலர் நகர், பி.ஆர்.சி., போக்குவரத்து பணிமனை, டான்பெட் உரக்கிடங்கு, முத்தால் நகர், ஜக்கதேவி நகர், லெட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், சத்திரரெட்டியபட்டி, அல்லம்பட்டி ரயில்வே தரைப்பாலங்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி நீண்ட நேரம் பின் வடிந்தது. விருதுநகர் வேல்சாமிநகர் வழியாக கவுசிகா நதிக்கு செல்லும் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு குறித்து தினமலர் நாளிதழில் அவ்வப்போது செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் பொதுப்பணித்துறை நிர்வாகமோ எதையும் கண்டு கொள்ளாது உள்ளது.



இவர்களது அசட்டை போக்கால் பொதுமக்கள் தான் சிரமப்படுகின்றனர். பி.ஆர்.சி., பணிமனை வழியாக செல்லும் இந்த நீர் வரத்து கால்வாயின் அடிப்பகுதியில் குப்பை , கழிவுகளால் அடைபட்டிருப்பதும் மழைநீரை செல்வதற்கு தடை உள்ளது. இதன் காரணமாக மழைநீரானது தெருக்கள், காலிநிலங்களில் தேங்கியது.



பி.ஆர்.சி., பணிமனை, உரக்கிடங்கிலும் மழைநீர் தேங்கியது. வேல்சாமிநகர் வரத்து கால்வாயில் நகராட்சி நிர்வாகம்தான் மண் அள்ளும் இயந்திரம் மூலம் தற்காலிகமாக பாலம் முகப்பில் சிறிது ஆழப்படுத்தியது. ஆனால் மழை நீருக்கு தடை ஏற்படுத்தும்மரம்,செடி கொடிகளை கண்டுக்கவில்லை. ஆனால் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறையினர் கலெக்டரிடம் மலுப்பல் பதில் அளித்து பணிகளில் தொய்வை ஏற்படுத்துகின்றனர். முத்தால் நகரில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.



குடியிருப்போர் விட்டை விட்டு வெளியே வர முடியாது தவித்தனர். ஒண்டிப்புலி நாயக்கனுார் பள்ளியில் கூரை ஒழுகியதால் மாணவர்கள் சிரமத்தை சந்தித்தனர். மீசலுாரில் ஓட்டு விடு இடிந்தது விழுந்தது. வடமலைக்குறிச்சி கண்மாய் நிறைந்தால் 9 ஷட்டர்களில் 3 ஷட்டர் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கவுகாசி நதி ஆற்று ஓரத்தில் உள்ள அய்யனார் நகர், யானைக்குழாய், பாத்திமா நகர் பகுதி மக்களுக்கு செ்சரிக்கை விடப்ட்டது. டி.கல்லுாப்பட்டி வரை உள்ள அனைத்து கண்மாய்களும் நிரம்பி விட்டதால் அடிக்கடி தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது.



மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வருவாய் பேரிடர் துறையினர் கேட்டுள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்துார்: மதியம் 1:00 மணி முதல் 1:40 வரை மணி கனமழை, மாலை 4:00 மணிக்கு சாரல் மழை பெய்தது. மம்சாபுரத்தில் பெய்த மழையால் முதலியார்குளம், வேப்பங்குளம், வாழைக்குளம் உட்பட அனைத்து கண்மாய்களும் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பெரியக்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.



மறவன்குளம், மொட்டைபெட்டான், கூமாபட்டி கண்மாய்களுக்கும் நீர்வரத்தும் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன. செண்பாகதோப்பு பேயனாற்றிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.



பிளவக்கல் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 130 கன அடி நீர் வர ,வினாடிக்கு 153 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையில் 31 அடி நீர் உள்ளது. கோவிலாறு அணை பகுதியில் பெய்த மழையால் அணைக்கு வினாடிக்கு 64.32 கன அடி நீர் வருகிறது. 31 அடி நீர் உள்ளது. வத்திராயிருப்பு தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன .



சிவகாசி : சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியிலிருந்து காலை 4:30 மணி வரை மழை பெய்தது. மழை தணிந்த நிலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு கன மழை பெய்தது. தொடர் மழையால் நகரின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் ஓடி போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தியது. ஜக்கம்மாள் கோயிலிலிருந்து பழைய தாயில்பட்டி செல்லும் ரோட்டில் முழங்கால் அளவிற்கு சென்ற தண்ணீரால் பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டனர்.



சிவகாசி தாலுகா அலுவலக வளாகத்தில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள், அலுவலர்கள் சிரமப்பட்டனர்.சிவகாசி பகுதியில் வண்ணாங்குளம், சித்துராஜபுரம், ஆனைக்குட்டம், கண்மாய்கள் நிரம்பிய நிலையில் சுக்கிரவார்பட்டி பெரியகுளம் கண்மாய் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது.



காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் பெய்த கன மழைக்கு பெரிய ஆலங்குளத்தில் உள்ள ஒன்றியநிர்வாகத்துக்கு சொந்தமான கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிக்க, கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. கிராமத்தினர் மணல் மூடைகளை அடுக்கி ஓரளவிற்கு தடுத்தனர். அதிகாரிகளால் மண் அள்ளும் இயந்திரம் மூலம் சரி செய்தனர்.



தளவாய்புரம்:தளவாய்புரம் அருகே மருத்துவன் ஏரி கண்மாய் நிறைந்து வெளியேறும் உபரிநீர் விவசாய நிலம் வழியாக புனல்வேலி ஊரணிக்கு வந்து நிரம்பியது.ஊரணியில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் இப்பகுதி வடக்கு தெரு உட்பட்ட ஆறு தெருக்களிலும் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. நேற்றைய மழையளவு (மி.மீ.,)அருப்புக்கோட்டை -- 34.00சாத்துார் -- 38.00ஸ்ரீவில்லிபுத்துார் -- 49.00சிவகாசி - -65.00விருதுநகர் -- 53.00திருச்சுழி -- 39.00ராஜபாளையம் - -32.00காரியாபட்டி -- 18.80வத்திராயிருப்பு -- 59.00பிளவக்கல் -- 31.00வெம்பக்கோட்டை- - 25.40கோவிலான்குளம் - -72.40துார்வார அறிவுறுத்தப்பட்டுள்ளது.



நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளால் குடியிருப்புகளில் புகுந்த மழைநீரை வெளியேற்ற அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து ஓடைகளை துார்வாரவும், மழைநீர் சீராக வடிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.காமராஜ், பருவமழை கண்காணிப்பு அலுவலர், விருதுநகர்.



விடுமுறையில் சொதப்பல்




மழை பெய்யாத போதொல்லாம் சாரலுக்கு விடுமுறை விட்ட மாவட்ட நிர்வாகம் நேற்று முனுதினம் நள்ளிரவு, நேர்று பகல் நேரங்களில் மழை பெய்தும் விடுமுறை விட தவறிவிட்டது. இதனால் காலை நேரங்களில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை முழங்கால் அளவு முழ்கி நடந்த படியும், மாலை நேரங்களில் பள்ளி வளாகங்கள், ரோட்டோரங்களில் தேங்கிய மழைநீரிலும், சாரல் மழையும் நனைந்தப் படி மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பினர்

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X