பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை | சிவகங்கை செய்திகள் | Dinamalar
பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
05:09

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்



.இப்பகுதியில் ஒரு வாரமாக பரவலாக மழை பெய்ததை தொடர்ந்து பாலாறு மற்றும் பெரியாறு கால்வாய்களில் தண்ணீர் வந்தது. 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பெரியாறு கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கீழ்சந்தி கண்மாய் வழியாக பல்வேறு கண்மாய்களில் தண்ணீர் பாய்ந்தது.இதனால் சலனி கண்மாய் நிரம்பியது. அக்கண்மாய் தண்ணீர் வெளியேற முறையான கலுங்கு வசதி இல்லாததால் அருகே உள்ள உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் புகுந்தது. 50 ஏக்கர் பரப்புள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X