வீரப்பட்டியில் கிட்னி பாதிப்பால் உயிரிழப்பு அதிகரிப்பு; கொதிக்கும் கிராம மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
05:11

சிவகங்கை : சிவகங்கை அருகே கீழப்பூங்குடி பகுதியில் உள்ள வீரப்பட்டி கிராமத்தில் தொடர்ந்துபலர் கிட்னி பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர்.



அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.வீரப்பட்டி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு குடிநீருக்காக கண்மாய் பகுதியில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்துதொட்டிகளில் ஏற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீரை பாத்திரங்களில் பிடித்து வைக்கும் போது அடியில் உப்பு போன்ற படிமங்கள் காணப்படுகிறது. இதனால் கிராமத்தில் பெரும்பான்மையினர் கிட்னி பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.



இன்னும் பலர் சிறு வயதிலேயே கிட்னி பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆழ்துளை கிணற்றில் 600 அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர்காரணமாக கிட்னி பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.



சீதா, 50: எனது கணவர் செல்வம் 55, கடந்த வாரம் தான் உயிரிழந்தார். அவருக்கு கிட்னி பாதித்ததால் தொடர் சிகிச்சை பெற்று வந்தவர் இறந்துள்ளார். எங்கள் கிராமத்தில் உள்ள குடிநீர் தான் கிட்னி பாதிப்புக்கு காரணம், என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். எனது கணவர் இறந்ததால் எனது குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ வழியின்றி தவித்து வருகிறேன்.



க.அழகு, 57: எனது கணவர் கணபதி கிட்னி பாதிப்பு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அன்றிலிருந்து கிராமத்தில் விநியோகிக்கப்படும் குடி நீரை குடிப்பதில்லை. அந்த நீரை பாத்திரங்களில் பிடித்து வைத்தால் அடியில் உப்பு போன்ற படிமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மழை நீரை சேமித்து குடித்து வருகிறேன். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறேன்.



தவமணி, 43: எங்கள் கிராமத்தில் பெரும்பான்மையினர் கிட்னி பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர். செல்வம், சந்திரன், மகேஷ், சுப்பிரமணி, கணபதி என தொடர்ந்து கிட்னி பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனக்கும் கிட்னி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்னை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். 3 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது ஆழ்துளை கிணற்று நீரை சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.



கிராமம் முழுவதும் அனைவரையும் பரிசோதிக்க முகாம் நடத்தப்படும், என தெரிவித்துள்ளனர். ஆழ்துளை கிணற்று நீரை யாரும் குடிநீராக பயன்படுத்துவதில்லை. கிட்னி பாதிப்புக்கான காரணத்தை கண்டறிந்து அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X