மானாமதுரை : மானாமதுரை உடைகுளம், காட்டு உடைகுளம், கணபதி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பொருட்கள் வாங்க கூட வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
காட்டு உடைகுளம் கண்மாயும் உடையும் நிலையில் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற கோரி மானாமதுரை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தாசில்தார் தமிழரசனிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். மழைநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.