தேவகோட்டை : தேவகோட்டை எல்லையில் மணிமுத்தாறு எனும் விருசுழி ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஏரியூர் உட்பட திருப்புத்துார் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிறைந்தால் தண்ணீர் வரும். இந்த ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு தரைபாலத்தின் மேல் தண்ணீர் ஓடியது. ஆற்றில் நீர் சென்றதால் மணல் அரித்து பாலத்தின் அடியில் இருக்கும் குழாய்கள் கீழே இறங்கும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறினர். பாலத்தின் இருபுறமும் முட்களை வெட்டி போட்டு போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.