'சஸ்பெண்ட்'; இலவச பயண பஸ்களில் பெண்களை விரட்டினால்...டிரைவர், கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
05:38


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை, கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் விரட்டினால் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய கடந்த மே மாதம் ஆணை பிறப்பித்தார்.



அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 214 அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுரையும் வழங்கியுள்ளது.



அதில், ஒரு பயணி என்றாலும் அவருக்காக பஸ்சை நிறுத்தி ஏற்றிச்செல்ல வேண்டும். பெண் பயணிகளிடம் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். வயது முதிர்ந்த பெண்கள் இருக்கையில் அமர உதவி செய்ய வேண்டும்.பெண்களிடம் எரிச்சலுாட்டும் வகையிலோ, கோபமாகவோ, இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது. பெண்கள் பஸ்சில் ஏறும்போதும், இறங்கும் போதும் கண்காணித்து பாதுகாப்பாக ஏற, இறங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



இலவச பயணம் என்பதால், அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. டவுன் பஸ்களில் ஆண்கள் எண்ணிக்கையை விட, பெண்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.ஆனால், சில மாதங்களாக அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்வதற்கு பெண்கள் யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதற்கு, அரசு டவுன் பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களை, அந்த பஸ்களில் பணிபுரியும் பெரும்பாலான கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள், முகம் சுளிக்கும் அளவிற்கு பேசுகின்றனர்.



பஸ் நிறுத்தங்களில் காத்திருக்கும் பெண்கள் பஸ்சை நிறுத்த கை காட்டினாலும் டிரைவர்கள் நிறுத்துவதில்லை. அதேபோன்று, பெண்கள் பஸ்களில் ஏறினால், விரட்டுவது போன்று கண்டக்டர்கள், டிரைவர்கள் பேசுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசின் உத்தரவால்தான் இலவசமாக பயணம் செய்கின்றோம். ஏன் இப்படி பேசுகிறீர்கள் என பெண்கள் கேட்டால் தகராறு ஏற்படுகிறது.



டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தங்களுக்கு படிகாசு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தால்தான் இதுபோன்று நடந்து கொள்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இந்த புகாரில் சிக்கும் டிரைவர், கண்டக்டர்களை அதிரடியாக வேறு ரூட்டுக்கு மாற்றியும் வருகின்றனர்.தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



-நமது நிருபர்-

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X