திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் சில தினங்களாக கன மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை துண்டிப்பு, நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் நேற்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டது.ஆனால், மழைநீர் தேங்கியுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மோகன், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.அதன்பேரில் திருவெண்ணெய்நல்லுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால், தலைமையாசிரியை கிரிஜா பள்ளிக்கு விடுமுறை அறிவித்தார். இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.