வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் 6 நாள் முகாமில் 39,321 விண்ணப்பங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
05:53

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் சுருக்க திருத்த முகாமில் 18 வயது நிரம்பிய 31 ஆயிரத்து 739 பேர், பெயர் சேர்க்கக் கோரி மனு அளித்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 1,272 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.



மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் கடந்த 13,14, 20, 21 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் நடந்தது. முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.அதன்படி 6 நாட்கள் நடந்த முகாமில் உளுந்துார்பேட்டை தொகுதியில் 10,878 ரிஷிவந்தியம் 9,202, சங்கராபுரம் 8,708, கள்ளக்குறிச்சி 10,533 என மொத்தமாக 39 ஆயிரத்து 321 விண்ணப்பங்கள், மனுக்களாக பெறப்பட்டது.



இதில், 18 வயது நிரம்பிய 31,739 பேர் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி மனு அளித்துள்ளனர்.அதேபோல் இறந்தவர்களின் பெயர் நீக்குதல் தொடர்பாக 3,108 மனுக்கள், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்வது தொடர்பாக 2,663, ஒரு சட்டசபை தொகுதிக்குள் முகவரி மாற்றுதல் தொடர்பாக 1,811 மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்களும் தேர்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X