வெளிநாடுகளிலிருந்து கர்நாடகாவுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
06:10

பெங்களூரு ; 'வெளிநாடுகளிலிருந்து கர்நாடகாவுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என, மாநில சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.அதிக வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக கூறப்படும் புதிய வகை கொரோனா வைரசான, 'ஒமைக்ரான்' உலக நாடுகளை போன்று கர்நாடகாவையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.இந்த வகை வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட தென் ஆப்ரிக்காவிலிருந்து, கடந்த 27ல் பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்துக்கு வந்தவர்களில், இரண்டு பயணியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

உறுதியானது. அது எந்த வகை என்பதை ரத்த மாதிரிகள் ஆய்வு செய்த போது, ஒரு நபருக்கு 'டெல்டா' வகை பாதிப்பு என்பது உறுதியானது.ஓரிரு நாளில் முடிவுகள்அதே வேளையில், 63 வயதுள்ள மற்றொரு நபருடைய ஆய்வு முடிவுகள் டெல்டாவை விட வேறுபட்டதாக இருந்ததால், அவருடைய ரத்த மாதிரிகள், ஐ.சி.எம்.ஆர்., எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வகத்துக்கு, மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

முடிவுகள் ஓரிரு நாளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், பள்ளி, கல்லுாரிகள் உட்பட மாநிலத்தின் சில பகுதிகளில் சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.இந்நிலையில், மாநில சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று காலை முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடந்தன.அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடனும், சிகிச்சை முறை குறித்து சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்லுாரி துறை உயர் அதிகாரிகளுடனும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன், ஆம்புலன்ஸ்கள் இருப்பு குறித்து தொற்று அதிகம் பரவும் மாவட்ட அதிகாரிகளுடனும் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார்.ஐந்து மணி நேரம் கூட்டம்காலை 11:30 மணிக்கு ஆரம்பமான கூட்டங்கள், மாலை 4:00 மணி வரை நடந்தன.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சுதாகர் கூறியதாவது:உருமாறிய கொரோனா பரவிய நாடுகளிலிருந்து வருவோருக்கு, விமான நிலையங்களில் கட்டாயமாக பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது.ஆனால், அனைத்து வெளிநாடுகளிலிருந்து கர்நாடகாவுக்கு வருவோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தினந்தோறும், 2,500 பயணியர் வெளிநாடுகளிலிருந்து வருகின்றனர்.

'நெகட்டிவ்' இருப்போர், வீட்டில் ஏழு நாட்கள் வரை தனிமைப்படுத்தப்படுவர். அறிகுறிகள் இருந்தும், நெகட்டிவ் என்று இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்தி, ஐந்தாம் நாளில் மீண்டும் பரிசோதனை நடத்தப்படும்.தொற்று இருந்தும் அறிகுறிகள் இல்லாதோருக்கு, ஏழாவது நாளில் மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். அறிகுறிகளுடன் தொற்று இருப்போருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.12 நாடுகளில் பரவல்உருமாறிய கொரோனா, 12 நாடுகளில் பரவியுள்ளது; கர்நாடகாவிலும் பரவ வாய்ப்புள்ளது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்காக, படுக்கை, ஆக்சிஜன், மருந்துகள் குறித்து இருப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநிலத்தில் 41 லட்சம் பேர், இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ரெகுலர் 3''30.11.2021 / அர்வின்குமார் 8:02 / ராமசுப்பிரமணியன், 8:101_DMR_0015கொரோனா பரவல் குறித்து சுகாதார துறை அமைச்சர் சுதாகர், மருத்துவ நிபுணர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இடம்: விதான் சவுதா, பெங்களூரு.---------------------------------------------------ஆலோசனை!உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த...வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு சோதனை கட்டாயம்மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகள் கொரோனா இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு, மெட்ரோ ரயில், மால், திரையரங்கிற்கு அனுமதி நிராகரிப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால், கொரோனா வந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், கட்டணத்தை அரசு செலுத்தக் கூடாது. காஸ், குடிநீர், மின்சாரம், பெட்ரோல், பென்ஷன் போன்ற அரசு திட்டங்கள் ரத்து வெளிநாட்டு பயணியருக்கு கொரோனா இருப்பது உறுதியானால் கட்டாய மரபணு சோதனை ஒமைக்ரான் வைரஸ் தாக்குவோருக்கு சிகிச்சை அளிக்க, பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனையை தயார் நிலையில் வைப்பது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை நடத்துதல் மாநிலத்தில் வாரத்துக்கு குறைந்தபட்சம் 5 சதவீத குழந்தைகளுக்கு பரிசோதனை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அடிக்கடி பரிசோதனை உள்புற நிகழ்ச்சிகளுக்கு, அதிகபட்சமாக 200 பேரும், வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு 500 பேரும் நிர்ணயிக்க வேண்டும் மால், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், லாட்ஜ்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துதல் சமூக வலைதளங்களில் ஊரடங்கு குறித்தும், இறப்பு குறித்தும் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X