சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை; ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு | கடலூர் செய்திகள் | Dinamalar
சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை; ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
06:19


கடலுார் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பளித்தது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் தனசேகர், 29; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 2019ம் ஆண்டு ஜன., 20ம் தேதி, 5 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.



புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து தனசேகரை கைது செய்து, கடலுார் 'போக்சோ' சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பு கூறினார். இதில், தனசேகருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதித்த சிறுமிக்கு நலவாழ்வு நிதி மூலமாக கடலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரூ.5 லட்சம் இழப்பீட்டை ஒரு மாதத்திற்குள் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X