காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
06:21

கடலுார் : பெண்ணை தாயாக்கி திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது.



கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரசன்ன சரவணன், 29; கடந்த 2016ம் ஆண்டு சட்டக் கல்லுாரியில் படித்தபோது, பி.எட்., படித்த 22 வயது உறவினர் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் நெருங்கி பழகினார்.இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்தார். எனினும், பிரசன்ன சரவணன் திருமணத்திற்கு மறுத்தார். அவரது பெற்றோர் பக்கிரி, 62; அமுதா, 56; ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நியாயம் கேட்டனர்.



பிரசன்ன ச



ரவணனின் பெற்றோர் திருமணத்திற்கு வரதட்சணையாக 30 சவரன் நகை, கார் கேட்டனர். கடந்த 2017ல் அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையிலும், அவரை திருமணம் செய்ய பிரசன்ன சரவணன் மறுத்து, குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கூறியுள்ளார்.பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, பிரசன்ன சரவணன், பக்கிரி, அமுதா ஆகியோரை கைது செய்து, கடலுார் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.வழக்கு விசாரணையில், பிறந்த குழந்தையின் தந்தை பிரசன்ன சரவணன் என்பது மரபணு சோதனையில் தெரியவந்தது.



வழக்கு முடிந்து நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.பிரசன்ன சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதில், ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்தை பாதித்த பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். பக்கிரி, அமுதா ஆகியோருக்கு தலா 1 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் செல்வ பிரியா ஆஜரானார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X