டிச.,01: பெட்ரோல், டீசல் விலையில் 28வது நாளாக இன்றும் மாற்றமில்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

01 டிச
2021
06:23
பதிவு செய்த நாள்
டிச 01,2021 06:21

சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 28 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, இரண்டும் லிட்டருக்கு தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
தமிழகத்தில் கடந்த மாதம்(நவ.,) 3ம் தேதி லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய்க்கும்; டீசல் 102.59 ரூபாய்க்கும் விற்பனையானது. அடுத்த நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய அரசு, 3ம் தேதி இரவு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டது. இதனால், 4ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைந்தது.

அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும்; டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாயின. இன்று (டிச.,01) வரை 28 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் உள்ளது. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selva - Chennai,இந்தியா
01-டிச-202110:12:37 IST Report Abuse
selva வாழ்க எலெக்ஷன்ஸ்..
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
01-டிச-202108:02:50 IST Report Abuse
J.Isaac இடைதேர்தல் முடிவு தான் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடைய வேண்டும்.
Rate this:
Gopal - Chennai,இந்தியா
01-டிச-202113:32:37 IST Report Abuse
Gopalஇத்தனை நாள் ஏற்றாமல் இருந்ததையும் சேர்த்து வைத்து விலையை ஏற்றி மக்கள் வயிற்றில் அடிப்பானுங்க.....
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
01-டிச-202107:19:56 IST Report Abuse
sridhar Will remain the same till elections to five states are over.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X