வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் | கடலூர் செய்திகள் | Dinamalar
வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
06:28

காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரியில் இருந்து 4வது நாளாக லால்பேட்டை மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் தண்ணீர் திறந்து வெளியேற்றப்படுகிறது.கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் நேற்று முன்தினம் மாலையிலிருந்து மழை நின்றுள்ளது. இதனால் நிலங்களில் தேங்கிய தண்ணீர் வடிகிறது. வீராணம் ஏரி நீர் மட்டம் 45.70 அடியாக உள்ளது.



வடவாற்றில் இருந்து ஜூரோ பாயிண்ட் மதகு வழியாக 450 கன அடி தண்ணீர் நேரிடையாக வெள்ளியங்கால் ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.வீராணம் ஏரிக்கு வடவாறு மூலம் அதிகளவாக 3605 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியில் இருந்து 4 வது நாளாக லால்பேட்டை மதகு வழியாக 1500 கன அடி தண்ணீர் வெள்ளியங்கால் ஓடையில் திறக்கப்பட்டுள்ளது.ஏரியில் இருந்து சேத்தியாத்தோப்பு பூதங்குடி வி.என்.எஸ் மதகு வழியாக 2045 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது. அணைக்கரை கீழணையில் நீர் மட்டம் 7 அடியாக உள்ளது. டெல்டா பகுதியில் கடந்த இரு நாட்களாக மழை இல்லாத போதும் கீழணைக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருந்து. இதனை அப்படியே கீழ் கொள்ளிடத்தில் திறந்து வெளியேற்றப்படுகிறது. காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கடந்த மாதம் 3ம் தேதி முதல் கீழணையில் இருந்து 28 நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X