கடலுார் ; கடலுாரில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 8 சவரன் நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம், கே.கே.ரோடு, ஏழாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சரவணமுத்து மனைவி ராஜராஜேஸ்வரி, 78;
இவர், கடந்த 24ம் தேதி சிதம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று பஸ்சில் கடலுார் வந்தார். கடலுாரில் இருந்து வீட்டிற்கு சென்ற போது, நகை வைத்திருந்த பெட்டியை காணவில்லை. அதில், 8 சவரன் செயின் இருந்தது. அதன் மதிப்பு ரூ. 2 லட்சம். புகாரின் பேரில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.