கடலுார் ; கடலுாரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டனர். கடலுார் தாழங்குடா பகுதியை சேர்ந்தவர்கள் நடராஜன், 55; இவரது மகன்கள் ராஜூ, 27; திலீப்ராஜ், 25; மூவரும் பைபர் படகில் தென்பெண்ணையாற்றில் நேற்று காலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால், படகின் இன்ஜினில் வலை சிக்கியது. இதனால், மூவருடன் சேர்ந்து படகு ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. அவர்கள் கூச்சலிட்டதால், அருகிலிருந்த மீனவர்கள் ஆற்றில் குதித்து மூவரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.