நிரம்பியது நங்காஞ்சியாறு அணை | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
நிரம்பியது நங்காஞ்சியாறு அணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
07:07

இடையகோட்டை : இடையகோட்டை நங்காஞ்சியாறு அணை நிரம்பி மறுகால் சென்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நங்காஞ்சி ஆற்றின் நீராதாரம் பரப்பலாறு அணை நீர் மற்றும் காட்டாற்று வெள்ளம். சில நாட்களாக பெய்த கனமழையால் அணை மெல்ல நிரம்பி வந்தது. பரப்பலாறு அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடிக்கு மேல் உபரிநீர் நங்காஞ்சி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் அணை வேகமாக நிரம்பி மறுகால் சென்றது.இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பலநுாறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இடையகோட்டையைச் சுற்றியுள்ள பல ஊராட்சிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் மறுகால் சென்றதையொட்டி மலர் தூவினர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X