செய்தி சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
07:12

மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் ஆய்வுவடமதுரை: மழைநீர் சேகரிப்பில் சாதனை நிகழ்த்தும் வகையில் மாவட்ட அளவில் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குளத்தூரில் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உலக சாதனை ஆய்வு அலுவலர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார். ஊராட்சி தலைவர் சுகந்தி சண்முகசுந்தரம், துணைத் தலைவர் வளர்மதி, ஏ.பி.டி.ஓ., ரவீந்திரன், ஊராட்சி செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய பொறியாளர்கள் பாலன், மணிகண்டன் உடனிருந்தனர்.-விவசாயிகள் மனுஆயக்குடி: பழநி ஆயக்குடி அருகே கணக்கம்பட்டி பகுதி விவசாயிகள் பயிர் காப்பீடு வழங்கக்கோரி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 2019 -- 20 ஆண்டிற்கான பயிர்களுக்கு காப்பீடு கணக்கம்பட்டி, பொட்டாம்பட்டி கிராம விவசாயிகள் செய்துள்ளனர். இவர்களுக்கு இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை அதனை விரைவில் வழங்கக்கோரி பழநி உதவி வேளாண்மை இயக்குனரிடம் மனு அளித்தனர்.மாணவர்களுக்கு உபகரணங்கள்பழநி: நகர ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொகுப்பு வளமையத்திற்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 28 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீல்சேர், காதொலி கருவி உட்பட உபகரணங்கள் வழங்கப்பட்டன. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அருள்ஜோதி, ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி, ஆசிரியர் பயிற்றுனர் சிவசெல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.டூவீலர் விபத்தில் முதியவர் காயம்வடமதுரை: எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் 65. வடமதுரை அருகே தென்னம்பட்டியில் நண்பர் துரையனுடன் பூக்கடை ரோட்டோரம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது உடையாம்பட்டி சேர்ந்த ராமர் 20, என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ரோட்டில் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து ரோட்டோரம் நின்றிருந்த லட்சுமணன் மீதும் மோதியதில் அவர் காயமடைந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.கலந்தாய்வு கூட்டம்திண்டுக்கல்: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி., ஸ்ரீனிவாசன் தலைமையில் நடந்தது.காவலன் 'எஸ்.ஓ.எஸ்'., செயலியை போலீசார், பொதுமக்கள் பதிவிறக்கம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அலைபேசியில் பேசியபடி, போதையில், ெஹல்மேட் அணியாமல் டூவீலரில் 2 பேருக்கு மேல் செல்லும் வாகன ஓட்டிகள், படிக்கட்டில் பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.உண்டியல் திருடர்கள் கைது திண்டுக்கல்: பித்தளைபட்டியில் உள்ள காளியம்மன் கோயில் உண்டியலை நேற்று மர்ம நபர்கள் உடைத்து திருட முயற்சித்தனர். அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்து விசாரித்ததில், வேடபட்டி ராஜா 21, சதாம் உசேன் 21, மாதவன் 21, ஏ.வெள்ளோடு ஐயப்பன் 26, என தெரிய வந்தது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X