பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
07:14

கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தொற்று பரவலை தடுக்க சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11, 12 ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை கல்வித்துறையின் 'எமிஸ்' விபரங்களின் அடிப்படையில் தயாரிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே 'எமிஸ்' இணையதளத்தில் மாணவர்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இருந்தும் நடப்பாண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் போன்ற விபரங்களை சரிபார்த்து, ஏதேனும் விடுபட்டிருந்தால் அதனை பதிவேற்றும் பணி வகுப்பு ஆசிரியர்கள் மூலம் நடந்து வருகிறது.

இந்த பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்று அச்சிடப்படும். பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்களில் தவறு ஏற்பட்டால் வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தேர்வுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல் தொடர்பான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X