அபாயத்தில் பள்ளி கட்டடம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
அபாயத்தில் பள்ளி கட்டடம்
Added : டிச 01, 2021 | |
Advertisement
 

திருவாடானை: திருவாடானை அருகே சேந்தனியில் பாழடைந்த பள்ளி கட்டடத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



திருவாடானை அருகே சேந்தனியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப் பள்ளி அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய பள்ளி கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளது. ஓடுகள், கம்புகள் சேதமடைந்துள்ளது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் கட்டத்தில் உள்ளது. கட்டடத்திற்குள் புதர் மண்டியிருப்பதால் விஷ பூச்சிகள் தஞ்சமடைந்துள்ளன. ஆகவே மாணவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர். கட்டடத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X