தொண்டி: தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.