கண்மாய் நீர் வெளியேற்றம்; 400 ஏக்கர் பாதிப்பதாக புகார் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
கண்மாய் நீர் வெளியேற்றம்; 400 ஏக்கர் பாதிப்பதாக புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
07:45

ராமநாதபுரம்: நாரணமங்களத்தைச் சேர்ந்த வைகை கண்மாய் முழுமையாக நிரம்புவதற்கு முன்னதாக, சிலர் தண்ணீரை வெளியேற்றுவதால் 400 ஏக்கரில் சாகுபடி பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



ராமநாதபுரம் தாலுகா நாரணமங்களம் ஊராட்சியைச்சேர்ந்த வைகை கண்மாய் 70 சதவீதம் மட்டும் நிரம்பியுள்ளது. இந்நீரை பயன்படுத்தி 400 ஏக்கரில் நெல்சாகுபடி நடக்கிறது. இந்நிலையில் கண்மாய் அருகேயுள்ள பரமக்குடி தாலுகா பொட்டகவயல் ஊராட்சியினர் முழுமையாக நிரம்புவதற்கு முன்னதாக, கண்மாயை வெட்டி சிலர் தண்ணீரை வெளியேற்றுகின்றனர். இதனால் 400 ஏக்கர் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பரமக்குடி தாசில்தாரிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. இவ்விஷயத்தில் கலெக்டர் தலையிட்டு கண்மாய் வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.---

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X