நயினார்கோவில்: நயினார்கோவில் ஒன்றியம் பொட்டகவயல் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதி வைகை கண்மாய் கிராமத்திற்கு இடையே நிலவி வந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.
இக்கிராமங்களுக்கு உட்பட்ட கண்மாய்களில் மழை தண்ணீர் நிரம்பும் நாட்களில் வயல்வெளி உட்பட ஊருக்குள் புகுந்து வந்தது. இரு கிராமத்திற்கு இடையே தண்ணீர் வழிந்தோட செய்வதில் பிரச்னை இருந்தது.நேற்று பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், ஆர்.டி.ஓ.,க்கள் பரமக்குடி முருகன், ராமநாதபுரம் ஷேக் மன்சூர், தாசில்தார்கள் பரமக்குடி தமிம்ராஜா, ராமநாதபுரம் ரவிச்சந்திரன் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தண்ணீர் செல்லும் வழி குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து பொட்டகவயல், வைகை கண்மாய் செல்லும் நீர் நாரணமங்கலம், மாதவனூர், வெண்ணத்தூர், திருப்பாலைக்குடி என 18 கண்மாய்களை நிரப்பி கடலுக்குள் செல்லும் வகையில் தீர்வு காணப்பட்டது.