நிதி நிறுவன வாடிக்கையாளர்களிடம் ரூ.1.82 கோடி மோசடி: கிளை மேலாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
13:10

சேலம்: சேலம், சொர்ணபுரியில் உள்ள நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை, 1.82 கோடி ரூபாயை மோசடி செய்த கிளை மேலாளர் உட்பட, இரண்டு பேர் மீது மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், சொர்ணபுரி, அண்ணாசாலையில், ஜனா சிறிய நிதி நிறுவன வங்கி லிட்., செயல்பட்டு வருகிறது. கடந்த, 2018 ஜூலை 18ல் மேற் கொள்ளப்பட்ட தணிக்கையில், 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த, 1 கோடியே, 82 லட்சத்து, 67 ஆயிரத்து, 400 ரூபாயை போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இந்த மோசடியில் அப்போதை கிளை மேலாளர் சேலம், சின்னத்திருப்பதியை சேர்ந்த தியாகராஜன் மகன் மதன்,34, திருவண்ணாமலை, போளூர் ரோட்டை சேர்ந்த சுரேஷ் மகன் புனித்குமார்,27, ஆகியோர் ஈடுபட்டது தணிக்கையில் தெரிய வந்தது. மோசடி குறித்து வங்கியின் மண்டல மேலாளர் ஸ்டாலின், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ?ஹாதாவிடம் புகார் அளித்தார். மோசடி குறித்து விசாரணை நடத்த சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், மதன், புனித்குமார் ஆகியோர் மீது போலி ஆவணங்களை தயாரித்து, கூட்டு சதி செய்து மோசடி செய்தது, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன் படுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X