தமிழக - கேரள மாநிலங்களிடையே... 'போலாம் ரைட்!' 21 மாதங்களுக்கு பின் பஸ்சில் பயணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
21:57

- நிருபர் குழு -

பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து கேரள மாநிலத்துக்கு,21 மாதங்களுக்கு பின், பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக - கேரள எல்லை நகரமான பொள்ளாச்சி வழியே, இருமாநிலங்களுக்கு இடையே அரசு மற்றம் தனியார் என மொத்தம், 63 பஸ்கள் இயங்குகின்றன. அவற்றில், கோபாலபுரம் வழித்தடத்தில், நான்கு தமிழக அரசு பஸ்கள், 22 கேரள அரசு பஸ்கள் மற்றும் எட்டு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மீன்கரை ரோடு வழித்தடத்தில் நான்கு தமிழக அரசு பஸ்கள், 14 கேரள அரசு பஸ்கள், 11 தனியார் பஸ்கள் இயங்குகின்றன. கொரோனா பரவல் காரணமாக, கடந்த, 2020 மார்ச் 23ம் தேதி, இரு மாநிலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை அரசு நிறுத்தியது. இதில், பொள்ளாச்சி - கேரளா இடையிலான பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகளுக்கு பிறகும், கேரள எல்லைகளான கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் மற்றும் கோபாலபுரம் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், இரு மாநில மக்களும் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பரவல் இரு மாநிலங்களிலும் கட்டுக்குள் வந்துள்ளதால், தமிழகம் - கேரள இடையே பஸ்கள் இயக்க நேற்று முதல் அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து, 21 மாதங்களுக்கு பின் துவங்கியது.உடுமலைஉடுமலை - மூணாறு வழித்தடத்தில், கேரள மாநில போக்குவரத்து கழகம் சார்பில், 4 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. அதே போல், தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், உடுமலை, பழநி கிளைகளிலிருந்து, 4 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.இரு மாநிலங்களிலிருந்து பஸ்கள் இயக்கப்படாததோடு, மருத்துவம் உள்ளிட்ட அவசிய தேவைக்கு வருவோர் மட்டும், மருத்துவ பரிசோதனை, தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்று உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.ஜீப் பயணம்கேரள மாநிலம், மூணாறு, மறையூர், அடிமாலி, கோதமங்கலம், காந்தலுார், கீழாத்துார் மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் வசிக்கும், பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு, மருத்துவம், மளிகை, காய்கறி என அத்தியாவசிய தேவைகளுக்கு உடுமலையை சார்தே இருந்ததால், கடும் பாதிப்படைந்தனர்.

உடுமலை வழியாக, கேரள மாநிலம் மூணாறு, மறையூர், சின்னாறுக்கு சுற்றுலா பயணிகளும் பாதித்தனர். தொற்று பரவல் குறைந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையிலும், பஸ் போக்குவரத்து துவங்காததால், ஜீப், கார், வேன் என தனியார் வாகங்களையே இப்பகுதி மக்கள் சார்ந்திருந்தனர். கூடுதல் கட்டணம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால், இரு மாநில பஸ் போக்குவரத்து துவங்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முதல், இரு மாநில போக்குவரத்து நேற்று துவங்கியது. கேரள மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 4 பஸ்களும், தமிழக போக்குவரத்து கழகம் சார்பில், இரண்டு பஸ்களும் இயக்கப்பட்டன.21 மாதத்திற்கு பின் பஸ்கள் இயக்கப்பட்டதால், தமிழக, கேரள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பஸ்களில், பயணிகள் கூட்டமும் அதிகளவு காணப்பட்ட நிலையில், முகக்கவசம், கிருமிநாசினி, உரிய சமூக விலகல் என பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனால், இருமாநில மக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.முதல்வருக்கு நன்றி கடிதம்கேரள மாநில தமிழ்பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் பேச்சிமுத்து, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக எல்லையில் அமைந்துள்ள பாலக்காடு, இடுக்கி, பத்தினம்திட்டை, கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களில், தமிழர்கள் மொழி சிறுபான்மையினராக வாழ்கின்றனர். பல்வேறு தேவைகளுக்காக, கோவை, பொள்ளாச்சி, பழநி, மதுரை மற்றும் நாகர்கோவில் பகுதிக்கு, கேரள மற்றும் தமிழக பஸ்களில் பயணித்து வந்தோம்.தற்போது, கொரோனா விதிகளுக்கு உட்பட்டு, இரு மாநில பஸ்களை இயக்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், தலைமை செயலாளர் இறையன்பு, கேரள போக்குவரத்து அமைச்சர் ஆன்டனிராஜ் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X