ஆழியாறு கவியருவியில் குளிக்க தடை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ஆழியாறு கவியருவியில் குளிக்க தடை
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
21:58

ஆனைமலை: ஆழியாறு கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆழியாறு கவியருவி முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளதால், தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் இருந்து அருவிக்கு நீர் வரத்து உள்ளது.இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்வதால், கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அருவியில் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர் வரத்து குறைந்ததும் அனுமதியளிக்கப்படும், என, வனத்துறையினர் தெரிவித்தனர்.இதனால், ஆழியாறு, வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் கவியருவியில் குளிக்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X