தக்காளி விலையில் சரிவு 15 கிலோ விலை ரூ.800 | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தக்காளி விலையில் சரிவு 15 கிலோ விலை ரூ.800
Added : டிச 01, 2021 | |
Advertisement
 

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில், 15 கிலோ எடை கொண்ட தக்காளி நேற்று, 800 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்துக்கு முன் வரை, உச்சத்தில் இருந்த தக்காளி விலை, அரசு நடவடிக்கையை தொடர்ந்து, படிப்படியாக சரிந்து வருகிறது.
இந்நிலையில், கிணத்துக்கடவு மொத்த காய்கறி மார்க்கெட்டில், நேற்று தக்காளி ஏலம் நடந்தது. இதில், ஒரு பெட்டி (15 கிலோ) தக்காளி அதிகபட்ச விலையாக - 800 ரூபாய்க்கு விற்பனையானது. குறைந்த பட்ச விலை - 650 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.மேலும், கத்திரிக்காய் (16 கிலோ பை) - 1,400 ரூபாய்க்கும், முள்ளங்கி (20 கிலோ) - 1,000, அவரைக்காய் கிலோ - 75, வெண்டைக்காய் - 80, பாகற்காய் - 40, புடலங்காய் - 30, பீர்க்கங்காய் - 45 ரூபாய்க்கும் விற்றது.கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தக்காளி விலை, 100 ரூபாய்; புடலங்காய் - 10, பீர்க்கங்காய் - 5 ரூபாய் என்ற அளவில் விலை சரிந்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X