பேய் படத்திற்கு சென்றவருக்கு 'திகில்' மிரட்டி மோதிரம் பறித்த இருவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
23:03

மதுரை:மதுரையில், சினிமாவிற்கு சென்றவரிடம், 'விஜிலென்ஸ்' போலீஸ் போல் நடித்து, மோதிரம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


மதுரை, கோவலன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 55. சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நவம்பர் 29ல், மதுரை சென்ட்ரல் தியேட்டரில் அரண்மனை-3 என்ற பேய் படம் பார்க்க சென்றபோது,பக்கத்து சீட்டில் இருந்தவர் அறிமுகமாகி பேசினார். இடைவேளையில் சொந்த ஊர் விபரங்களை கேட்ட அந்நபர், 'நானும் அந்த ஊரு தான்' எனக் கூற நெருக்கம் பலமானது.


'படம் முடிந்து வெளியே வந்தபோது அந்நபர், 'டீ குடித்துவிட்டு போகலாம்' என வெங்கடேசனை அருகில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். டீ குடித்தபோது அங்கு வந்த ஒருவர், 'நான் விஜிலென்ஸ் போலீஸ். உங்க மேல புகார் வந்திருக்கு' என வெங்கடேசனை மிரட்ட ஆரம்பித்து, சோதனை செய்ய தயாரானார். எதிர்ப்பு தெரிவித்த வெங்கடேசனிடம், 'இப்படி எதிர்த்தவர்களை கைது செய்திருக்கிறேன். உன்னையும் கைது செய்து ஜீப்பில் ஏற்றி, அசிங்கப்படுத்தி விடுவேன்' என மிரட்டினார்.


பயந்து போன வெங்கடேசனிடம் 4 கிராம் மோதிரத்தை பறித்தவர், 'நாளை 80 ஆயிரம் ரூபாயோடு ஆபீசிற்கு வந்து என்னை பாருங்க. கேஸ் போடாம பார்த்துக்கிறேன். 'மோதிரத்தை அங்கு வந்து வாங்கிக்கோங்க' எனக் கூறி தலைமறைவானார். அதுவரை உடன் இருந்த தியேட்டர் நண்பரும் தலைமறைவானார்.


இது குறித்து, திடீர் நகர் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். விசாரணையில், விஜிலென்ஸ் போலீசாக வந்தவரும், தியேட்டர் நண்பரும் கூட்டாளிகள் என தெரிந்தது. வெங்கடேசனிடம் நட்பாக பழகியது, மோதிரம் பறித்தது எல்லாமே திட்டமிட்டு அரங்கேற்றியவை. போலீசாக நடித்தவர், திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி ரவிசங்கர், 40; மற்றொருவர் கோவை குனியமுத்துாரைச் சேர்ந்த அஜி ஷெரீப், 40; இருவரும் கைது செய்யப்பட்டனர்.


இவர்கள் மதுரை மேல கோபுரத்தெரு பகுதி விடுதியில் தங்கி, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். போலீசார் கூறுகையில், 'ஆட்களின் தோற்றத்தை வைத்து பழகி, அவர்களின் பின்னணி குறித்து, அஜி ஷெரீப் விசாரித்து, அலைபேசியில் ரவிசங்கருக்கு தெரிவித்து விடுவார். 'அதற்கு தகுந்தாற்போல் ரவிசங்கர் மிரட்டி பணம், நகைகளை கறந்துள்ளார். இதுவரை யாரும் புகார் கொடுக்காததால், எங்கள் கவனத்திற்கு வரவில்லை' என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X