பல்லடம்: பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி நொச்சி பாளையம் கிராமத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.அப்பகுதியிலுள்ள வீதி ஒன்றில், தாழ்வான இடத்தில் மழைநீர் தேங்கி வந்தது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் செல்ல சிரமப்பட்டு வந்ததால், அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், ரோட்டில் மண் கொட்டப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'ரோடு தாழ்வாக இருப்பதால், மழைநீர் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தோம். ஊராட்சி நிர்வாகம் சார்பில், ரோட்டில் மண் கொட்டப்பட்டது.இதனால், ரோடு சேறும் சகதியும் நிறைந்து, வாகன ஓட்டிகளுக்கு மேலும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. தண்ணீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.