36 ஆண்டுகளுக்கு பின் வந்த தண்ணீர்; விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2021
00:01

வெள்ளகோவில்: வட்டமலை கரை அணைக்கு, 36 ஆண்டுகளுக்கு பின், தண்ணீர் வந்தது. விவசாயிகள் மலர் துாவி வரவேற்றனர்.

பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.வெள்ளகோவில் அருகே உத்தமபாளையம் வட்டமலைக்கரை அணை கட்டப்பட்டு 40 ஆண்டு ஆகிறது. அணைக்கு தண்ணீர் விடக்கோரி, வட்டமலைக்கரை பாசன நீரை பயன்படுத்துவோர் சங்கம், மகாத்மா காந்தி நற்பணி மன்றம், நிழல்கள் அறக்கட்டளை உட்பட பல்வேறு தன்னார்வல அமைப்பினர், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், 10,008 கார்த்திகை தீபம் ஏற்றுதல், மாரத்தான் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.இச்சூழலில், கடந்த 28ம் தேதி பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் ஷட்டரிலிருந்து 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வழிப்பாதையிலுள்ள 40, தடுப்பணைகள், 56 சிறு குட்டைகள் நிரம்பி நேற்று மதியம் 12:00 மணி அளவில் செட்டிபாளையம் அருகே வட்டமலை கரை அணைக்கு தண்ணீர் வந்தது. தண்ணீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். தாரை தப்பட்டை முழங்க, பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.விவசாயிகள் கூறியதாவது:அமைச்சர் சாமிநாதன், எங்களின் மனுவை பரிந்துரை செய்து அணைக்கு தண்ணீர் பெற அனுமதி பெற்று தந்தார். அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி. அணைக்கு 36 ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் கிடைத்துள்ளது. தொடர்ந்து அணையை நன்கு பராமரித்து ஆண்டு தோறும் தண்ணீர் கிடைக்க செய்தால், 6,043 ஏக்கர் பாசன வசதி பெறும் வாய்ப்பு கிடைக்கும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வள ஆதாரத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gajageswari - mumbai,இந்தியா
02-டிச-202105:37:17 IST Report Abuse
Gajageswari மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X