ரூ. 12 கோடி உரம் நிலுவை நீலகிரி விவசாயிகள் தவிப்பு | நீலகிரி செய்திகள் | Dinamalar
ரூ. 12 கோடி உரம் நிலுவை நீலகிரி விவசாயிகள் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
00:27

ஊட்டி: நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு, 12 கோடி ரூபாய்க்கான உரம் வழங்கப்படாததால், தோட்டங்களை பராமரிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீலகிரியில், மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், 77 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 34 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.நடப்பாண்டில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பயிர் கடனில், 25 சதவீதம் தொகைக்கு நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் வாயிலாக உரம் வழங்கப்படுகிறது. கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களாக உரம் வழங்கப்படவில்லை. 77 வங்கிகளில், 12 கோடி ரூபாய்க்கான உரம் வினியோகிக்கப்படவில்லை. உரங்கள் பற்றாக்குறையால் தோட்டங்களை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.என்.சி.எம்.எஸ்., துணைப்பதிவாளர் தமிழ்செல்வன் கூறுகையில்,''விவசாயிகளுக்கு இதுவரை, எட்டு கோடி ரூபாய்க்கு உரம் வழங்கப்பட்டுள்ளது. உரம் சப்ளை இல்லாததால், குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்க முடியவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் நிலைமை சரியாகிவிடும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X