கூடலுார்: கூடலுார் வந்த கேரளா அரசு பஸ்சுக்கு, பயணிகள் தேங்காய் உடைத்து வரவேற்பு அளித்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலுாரில் இருந்து கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி, நிலம்பூருக்கும்; கேரளா மலப்புரம் மாவட்டம், பெருந்தல்மண்ணாவில் இருந்து, கூடலுாருக்கும் கேரளா அரசு பஸ் போக்குவரத்து நேற்று முதல் துவங்கப்பட்டது.கூடலுார் வந்த கேரளா அரசு பஸ்சுக்கு, தமிழக-கேரளா எல்லையான நாடுகாணியில், ஆட்டோடிரைவர்கள், பயணிகள் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து வரவேற்பு அளித்தனர்.கூடலுாரில் இருந்து நிலம்பூர் சென்ற, தமிழக அரசு பஸ்சில் இருந்த பயணிகளுக்கு, கேரள மக்கள், இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர். 20 மாதங்களுக்கு பின், கேரளாவுக்கு பஸ் இயக்கப்பட்டதால், இரு மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.