வாடகைக்கு கட்டிய கடை... திறக்க என்ன தடை? அடைப்புக்கு காரணம் அதிகாரிகளின் அசட்டை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2021
00:46



-நமது நிருபர்-

கோவை நகரில் மாநகராட்சி உட்பட, பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள கடைகளும், வாடகைக்கு விடப்படாமல் பூட்டியே கிடப்பதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கின்போது, கடைகள் அனைத்தும் மூடப்பட்டபோது, தள்ளுவண்டி, ஆட்டோ, டெம்போக்களில் வைத்து மளிகை, காய்கறி மற்றும் பழங்கள் விற்கும் வணிகம் அதிகரித்தது. ரோட்டோரக் கடைகளும் எக்கச்சக்கமான முளைத்தன.வேலை வாய்ப்பை இழந்த பலருக்கும், இந்த ரோட்டோரக் கடைகள் வாழ்வளித்தன. மக்களுக்கும் பயன் அளித்தன. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னும், ரோட்டோரக் கடைகள், வண்டிக்கடைகள் எண்ணிக்கை குறையவே இல்லை; மாறாக. அதிகமாகி வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் பிரச்னை ஏற்படுகிறது. கடை வாடகை கொடுத்து, வரி செலுத்தி, கடை நடத்துவோருக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.கோடிகளில் வாடகை பாக்கி!இது ஒரு புறமிருக்க, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும், மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கடைகளில் கோடிக்கணக்கில் வாடகை பாக்கி வர வேண்டியுள்ளது.மத்திய மண்டலத்தில் மட்டும், 25 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி இருப்பதும், மொத்தத்தில் ரூ.70 கோடிக்கும் மேல் வாடகை பாக்கி உள்ளதும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகத் தெரியவந்தது.

வாடகை செலுத்தப்படாத கடைகளைக் காலி செய்து, மறுஏலம் விட்டால், மாநகராட்சிக்கு மிகப்பெரிய வருவாய் கிடைக்கும். அதேபோல, இதே மாநகராட்சியின் சார்பில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் கட்டப்பட்ட கடைகளும் வாடகைக்கு விடப்படாமல், ஆண்டுக்கணக்கில் பூட்டிக்கிடக்கின்றன.தனியார் கடைகளை விட, அதிக வாடகை நிர்ணயித்ததால்தான் இவற்றை ஏலம் எடுக்க யாரும் முன் வருவதில்லை. மாநகராட்சியில் நிதியின்றி, வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படுகின்றன. அனைத்து அரசுத்துறைகளும் 'நிதியில்லை' என்று பஞ்சப்பாட்டு பாடுகின்றன. இதுபோல கடைகளைக் கட்டி விட்டு, ஆண்டுக்கணக்கில் பூட்டிப் போட்டிருந்தால், அரசுக்கு எப்படி வருவாய் வரும்; வேலைகள் எப்படி நடக்கும்?இதோ சின்னதாக ஒரு 'பூட்டு' பட்டியல்!l டவுன்ஹால் பகுதியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்காக கட்டப்பட்ட, பூமாலை வணிக வளாகத்திலுள்ள கடைகளும், பல ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கின்றன.l பி.என்.புதுார்-சிறுவாணி ரோட்டின் நுழைவாயில் பகுதியில், மாநகராட்சி வணிக வளாகமே பல மாதங்களாகப் பூட்டிக்கிடக்கிறது. இதனால் கடைக்கு முன்புறமிருந்த இடமே, அருகிலுள்ள பெட்ரோல் பங்க்கிற்கு பாதையாக மாற்றப்பட்டுள்ளது.l மருதமலை தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்ட வணிக வளாகத்திலும், பல ஆண்டுகளாக ஒரு கடையும் திறக்கப்படவே இல்லை.l வடவள்ளி-தொண்டாமுத்துார் ரோட்டில், தாட்கோ சார்பில் கட்டப்பட்ட பல கடைகள் பூட்டியே கிடக்கின்றன.இவை யாவும் ஒருசில உதாரணங்களே!

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X