கேரள முதல்வர் கருத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பேசியதால் சர்ச்சை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கேரள முதல்வர் கருத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பேசியதால் சர்ச்சை
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
00:49

மூணாறு:முல்லை பெரியாறு அணை பாதுகாப்புடன் உள்ளதாக கூறிவரும் கேரள முதல்வர் பினராயிவிஜயனின் கருத்துக்கு எதிராக அணை ஆபத்தாக உள்ளது எனவும் இடுக்கி மாவட்டத்தின் மேல் உள்ள தண்ணீர் வெடிகுண்டு அணை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினரும், மாஜி மின்துறை அமைச்சரும் உடும்பன்சோலை எம்.எ.ஏ.,வுமான எம்.எம்.மணி கூறியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது பேச்சால் எம்.எம்.மணி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அவர் நேற்று முன்தினம் நெடுங்கண்டத்தில் ஹைரேஞ்ச் பாதுகாப்பு குழு எனும் அமைப்பினர் விவசாயிகளுக்காக நடத்திய போராட்டத்தில் பங்கேற்று கேரள முதலவரின் கருத்துக்கு எதிராக பேசி மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளார்.அவர் பேசியதாவது: முல்லை பெரியாறு அணை ஆபத்தாக உள்ளது. சர்க்கரை, சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்ட அணையின் உட்புறம் கீறல் ஏற்பட்டுள்ளது. அதனை அமைச்சர்களுடன் சென்றபோது தெரிந்து கொண்டேன்.
சிமென்ட், கம்பி ஆகியவற்றை பூசி பயனில்லை. அணை ஆபத்தாக உள்ளது என அறிவதற்கு இனி ஆய்வு நடத்துவது முட்டாள்தனம். நமக்கு பாதுகாப்பு வேண்டும். அதற்கு புதிய அணை வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் சாதகமாக முடிவு எடுத்தால் பிரச்னை தீரும். முல்லைபெரியாறு பிரச்னையில் ஹைரேஞ்ச் பாதுகாப்பு குழு மற்றும் இடுக்கி மாவட்ட மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X