ஜோதிமணி குற்றச்சாட்டு கரூர் கலெக்டர் பதிலடி | கரூர் செய்திகள் | Dinamalar
ஜோதிமணி குற்றச்சாட்டு கரூர் கலெக்டர் பதிலடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
00:56

கரூர்:கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி குற்றச்சாட்டுகளுக்கு, சமூக வலைதளத்தில் கரூர் கலெக்டர் பிரபுசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அரசு திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்த, கரூர் கலெக்டர் பிரபு சங்கர் அனுமதி மறுப்பதாக கூறி, நவம்பர் 25ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் காங்., - எம்.பி., ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், 'அதிநவீன உதவி உபகரணங்களை வழங்கி வருவதுடன், கோரிக்கை மனுக்கள் மீது உடன் நடவடிக்கை எடுத்து வருவதற்கு மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம், கண் பார்வையற்றோர் நலச் சங்கம், கலெக்டரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளன' என, தன் சமூகவலைதள பக்கத்தில் கலெக்டர் பிரபு சங்கர் பதிவிட்டு உள்ளார். இதன் வாயிலாக, எம்.பி., ஜோதிமணி குற்றச்சாட்டுகளுக்கு மறைமுகமாக, கலெக்டர் பதிலடி கொடுத்துள்ளார்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X