'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., வழக்கு விழுப்புரம் நீதிபதி எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2021
01:07

விழுப்புரம்:'பாலியல் தொல்லை வழக்கை தாமதப்படுத்த நினைத்தால் 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்படும்' என, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., தரப்பினருக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.


தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார்.இதையடுத்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதும், பெண் அதிகாரியை மிரட்டி கார் சாவியைப் பறித்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.


கால அவகாசம்




இவ்வழக்கு, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 25ம் தேதி நடந்த விசாரணையின் போது, மாஜி சிறப்பு டி.ஜி.பி., தரப்பினர், பெண் அதிகாரியிடம் குறுக்கு விசாரணைக்காக நேற்று 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


மாஜி சிறப்பு டி.ஜி.பி., ஆஜராகவில்லை. மாஜி எஸ்.பி., கண்ணன் மற்றும் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஆஜராகினர். பெண் அதிகாரியிடம் எதிர்தரப்பு குறுக்கு விசாரணை செய்ய, நீதிபதி கோபிநாதன் அனுமதியளித்தார்.அப்போது, மாஜி சிறப்பு டி.ஜி.பி., தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, தங்களின் மூத்த வழக்கறிஞர் மற்றொரு பணி காரணமாக, ஐகோர்ட்டில் இருப்பதால் வரமுடியவில்லை. இதனால், பெண் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.


இதற்கு நீதிபதி கோபிநாதன் ஆட்சேபம் தெரிவித்து, 'ஆரம்பத்தில் இருந்தே இவ்வழக்கு விசாரணைக்கு 'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., தரப்பு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. ஒவ்வொரு விசாரணையின் போதும், ஏதாவது காரணம் கூறி மனு தாக்கல் செய்வதையும், கால அவகாசம் கேட்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.


ரகசிய விசாரணை




மேலும், 'வேண்டுமென்றே இவ்வழக்கு விசாரணையை தாமதப்படுத்த நினைக்கிறீர்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்படும்' எனவும் நீதிபதி எச்சரித்தார்.


தொடர்ந்து, செங்கல்பட்டு மாஜி எஸ்.பி., கண்ணன் தரப்பினர், பெண் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்தார். கண்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் வெங்கடேசன், தெய்வநாயகம் ஆகியோர் காலை 10:45 மணிக்கு, பெண் அதிகாரியிடம் குறுக்கு விசாரணையை துவக்கினர். கோர்ட் கதவுகள் மூடப்பட்டு, ரகசியமாக விசாரணை நடந்தது.


மாலை 4:45 மணி வரை நடந்த குறுக்கு விசாரணையின் முழு விபரங்களை நீதிபதி பதிவு செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.அன்று, அரசு தரப்பில் சேர்க்கப்பட்டுள்ள ஆறாவது சாட்சியான மாஜி சிறப்பு டி.ஜி.பி.,யின் டிரைவராக இருந்த, சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் ராமராஜ், ஏழாவது சாட்சியான, அப்போதைய பெரம்பலுார் ஏ.டி.எஸ்.பி., கார்த்திகேயன் ஆகியோர் சாட்சியம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X