கால அவகாசம்
இவ்வழக்கு, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 25ம் தேதி நடந்த விசாரணையின் போது, மாஜி சிறப்பு டி.ஜி.பி., தரப்பினர், பெண் அதிகாரியிடம் குறுக்கு விசாரணைக்காக நேற்று 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாஜி சிறப்பு டி.ஜி.பி., ஆஜராகவில்லை. மாஜி எஸ்.பி., கண்ணன் மற்றும் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஆஜராகினர். பெண் அதிகாரியிடம் எதிர்தரப்பு குறுக்கு விசாரணை செய்ய, நீதிபதி கோபிநாதன் அனுமதியளித்தார்.அப்போது, மாஜி சிறப்பு டி.ஜி.பி., தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, தங்களின் மூத்த வழக்கறிஞர் மற்றொரு பணி காரணமாக, ஐகோர்ட்டில் இருப்பதால் வரமுடியவில்லை. இதனால், பெண் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
இதற்கு நீதிபதி கோபிநாதன் ஆட்சேபம் தெரிவித்து, 'ஆரம்பத்தில் இருந்தே இவ்வழக்கு விசாரணைக்கு 'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., தரப்பு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. ஒவ்வொரு விசாரணையின் போதும், ஏதாவது காரணம் கூறி மனு தாக்கல் செய்வதையும், கால அவகாசம் கேட்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.
ரகசிய விசாரணை