ஒரு விபத்தில் தப்பியவர் அடுத்த விபத்தில் பலி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
ஒரு விபத்தில் தப்பியவர் அடுத்த விபத்தில் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
01:10

வேடசந்துார்:வேடசந்துார் அருகே தனியார் பஸ் மீது ஆம்புலன்ஸ் மோதி, அதில் இருந்த இருவர் பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆர். புதுக்கோட்டை ஊராட்சி, காளகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி 45. ஊராட்சி மேல்நிலைத் தொட்டி ஆப்பரேட்டர். நேற்று மாலை, அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அவ்வழியாக டூ - வீலரில் வந்த மணிவேல், 37, அவர் மீது மோதினார். இருவரும் காயமடைந்தனர்.
அவசரகால 108 ஆம்புலன்சை வரவழைத்து, அதில் மணிவேல், பழனிசாமி, உதவியாக உறவினர் வீரகுமார், 27, ஆகியோர் வேடசந்துார் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பழனிசாமி, வீரகுமார், ஆம்புலன்ஸ் பெண் உதவியாளர் சத்யா, 30; சித்தா பிரிவில் பணியாற்றும் சுமதி, 30, ஆகியோர் ஆம்புலன்சில் திண்டுக்கல் கிளம்பினர்.விட்டல் நாயக்கன்பட்டி அருகே முன்னால் சென்ற தனியார் பஸ், திடீரென பிரேக் அடித்து நிறுத்தி பயணியரை ஏற்றியது.

அப்போது, பஸ் மீது பின்னால் வந்த ஆம்புலன்ஸ் மோதியது. இதில் பழனிசாமி, வீரகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஊழியர்கள் சத்யா, சுமதி பலத்த காயம் அடைந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X