பழநி:திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரி ராமராஜ் 50, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பழநி பெண் ஆன்லைனில் புகார் செய்தார்.
வழக்கு பதிவு செய்த பழநி போலீசார் உண்மை தன்மை குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ராமராஜின் மனைவி கவிதா 45, பாலியல் புகார் கூறிய பெண் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.