மதுரை : மதுரை மண்டலத்தில் பல பகுதிகளில் மின்வாரிய அதிகாரிகள் நடத்திய சோதனையில் மதுரை கிழக்கு, உசிலம்பட்டி, சமயநல்லுார் மற்றும் திருமங்கலம் என 9 இடங்களில் மின் திருட்டு கண்டுபிடித்து,
ரூ.6,33,096 அபராதம் விதித்தனர்.மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டவர்களிடம் ரூ.56,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மின் திருட்டு பற்றிதெரிய வந்தால் 94430 37508 என்ற அமலாக்க பிரிவு அலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். தகவல் ரகசியமாக வைக்கப்படும் என மதுரை மண்டல மின்வாரிய அமலாக்க பிரிவு செயற் பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.