ரிஸ்க் அலவன்ஸ் உயர்வில் தீயணைப்பு துறை புறக்கணிப்பு: குமுறும் பணியாளர்கள் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ரிஸ்க் அலவன்ஸ் உயர்வில் தீயணைப்பு துறை புறக்கணிப்பு: குமுறும் பணியாளர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
01:33

ராமநாதபுரம்:சீருடை பணியாளர்களில் போலீசாருக்கு மட்டும் 'ரிஸ்க் அலவன்ஸ்,' உயர்த்தப்பட்டுள்ளதால் தீயணைப்பு மற்றும் சிறைத்துறையினர் குமுறுகின்றனர்.
தமிழக அரசின் சீருடை பணியாளர்களுக்கு போக்குவரத்து பயணப்படி, வீட்டு வாடகைப்படி, ரிஸ்க் அலவன்ஸ் உள்ளிட்ட பல்வேறு படிகள் சம்பளத்துடன் வழங்கப்படுகிறது.

போலீஸ், தீயணைப்பு, சிறைத்துறையினருக்கு ரிஸ்க் அலவன்ஸ் தொகையாக இதுவரை மாதம் ரூ.800 வழங்கப்பட்டு வந்தது.தற்போது, போலீசாருக்கு மட்டும் ரிஸ்க் அலவன்ஸ் ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர், சிறைத்துறையினருக்கு உயர்த்தவில்லை.
தாங்களும் போலீசாருக்கு இணையாக தீ விபத்துகள், வெள்ள அபாய காலங்களில் உயிரை துச்சமென கருதி பணியாற்றுகிறோம். எங்களுக்கு மட்டும் ரிஸ்க் அலவன்ஸ் உயர்த்தாதது வேதனை அளிக்கிறது என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X