மீன் பிடிக்க கண்மாய் அடைப்பு விவசாய நிலங்கள் பாதிப்பு | சிவகங்கை செய்திகள் | Dinamalar
மீன் பிடிக்க கண்மாய் அடைப்பு விவசாய நிலங்கள் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
02:02


சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. மீன் பிடிப்புக்காக கலுங்குகளை அடைத்துள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் பருவமழை காரணமாக உப்பாறு, பாலாறு, விருசுழியாறு, சருகணியாறு, மணிமுத்தாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 4323 கண்மாய்கள், 4598 ஊரணிகள் உள்ளன. 60 சதவீத கண்மாய், ஊரணிகள் நீர் வரத்து காரணமாக நிறைந்து

மறுகால்பாய்ந்து வருகிறது. கண்மாய் கலுங்கு பகுதிகளில் நீர் வரத்துக்கு ஏற்ப வெளியேற்ற வேண்டும்.கலுங்கு பகுதிகளில் மீன் பிடிப்பதற்காக அடைத்து குறைந்தளவு நீரே வெளியேறும் வகையில் செய்துள்ளனர். இதன் காரணமாக பல கண்மாய் நீர் பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் நீர் தேங்கியுள்ளது. கண்மாய் கலுங்கு வழியாக நீரை வெளியேற்றாமல் மீன் பிடிப்புக்காக அடைத்துள்ள கலுங்கினை முழுமையாக திறந்து கண்மாய் பகுதிகளை பாதுகாக்க பொதுப்பணித்துறையினரும், ஒன்றிய நிர்வாகம், வருவாய்த்துறையினர் முன் வர வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X