கரூர்:கரூரை சேர்ந்தவர் ரஜினிகாந்த், 55; எலும்பு முறிவு டாக்டர். இவர், 17 வயதுடை தன்னுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த மாதம், 13ல் கரூர் மகளிர் போலீசில் தாய் புகார் செய்தார்.
இதையடுத்து, ரஜினிகாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, 17ல் கைது செய்து, 15 நாள் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நேற்றுடன் நீதிமன்ற காவல் நிறைவு பெற்றதையொட்டி ரஜினிகாந்தை போலீசார் சிறையில் இருந்து அழைத்து வந்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு,வரும், 15 வரை டாக்டரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.