காரைக்குடி : காரைக்குடியில் கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது தொடர்கிறது.கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தது. பரவல் குறைந்ததையடுத்து திறக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலை. கல்லுாரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் வந்து செல்கின்றனர்.கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்கள் பெரும்பாலும் டவுன் பஸ் மற்றும் தனியார் பேருந்துகளை நம்பியே உள்ளனர். சாக்கோட்டை, புதுவயல் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினமும் காரைக்குடிக்கு வந்து செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பேருந்து இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.