வேடசந்தூர் : வடமதுரை ஒன்றிய மார்க்சிஸ்ட் குழு சார்பில் ஏழை எளியோருக்கு பட்டா கேட்டு, மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் தலைமை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர்கள் அருள்செல்வன், முத்துச்சாமி முன்னிலை வகித்தனர்.வேடசந்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட இவர்கள் தாசில்தார் மணிமொழியிடம் மனுக்களை அளித்தனர். ஒன்றிய செயலாளர்கள் மலைச்சாமி, வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.