ஆண்களுக்கு இலவச 'வாசக்டமி' சிகிச்சை | மதுரை செய்திகள் | Dinamalar
ஆண்களுக்கு இலவச 'வாசக்டமி' சிகிச்சை
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
02:47

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான 'வாசக்டமி' அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது.குடும்ப நல செயலகம் சார்பில் இலவசமாக ரத்தமின்றி, தழும்பு இல்லாத 'வாசக்டமி' எனும் கு.க., சிகிச்சை ஆண்களுக்கு செய்யப்படுகிறது.



மயக்க மருந்து கொடுப்பதில்லை. பக்க விளைவுகள் இல்லை.சிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் வழக்கமான பணிகளில் ஈடுபடலாம். ஊக்கத் தொகையாக ரூ.1100 வழங்கப்படும். விருப்பமுள்ளோருக்கு முதலில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். தொற்று இல்லை என உறுதியானதும் சிகிச்சை அளிக்கப்படும். விபரங்களுக்கு 79043 54617, 96006 59027 ல் பேசலாம் என, குடும்ப நல துணை இயக்குனர் பூங்கோதை தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X