திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.மருத்துவ கண்காணிப்பாளர் வீரமணி திறந்து வைத்தார். பேராசிரியர் கார்த்திக் ராஜா, சிறப்பு மருத்துவர் செந்தில்குமரன் பங்கேற்றனர்.கண்காணிப்பாளர் கூறுகையில், ''தனியாக செயல்பட்டபிரிவுகள் தற்போது ஒரே இடத்தில் துவங்கியுள்ளது. திங்கள்மூட்டு தேய்மானம், செவ்வாய் நுண்துளை அறுவை சிகிச்சை, புதன் தண்டுவடம், வியாழன் குழந்தைகள் மற்றும் கோணல் கால் சிகிச்சை காலை 9:00 முதல் 10:00 மணி வரை அளிக்கப்படும்'' என்றார்.